
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இணையத்தளம் ஒன்றில் வெளியான தனது செய்தி தொடர்பாகவே கோப்பாய் பொலிஸாரின் ஊடாக இந்த ஆணை பிறப்பிக்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நான்காம் மாடிக்கு வருகை தருமாறு ஆணை பிறப்பிக்கப்பட்ட போதும் ஆந்த ஆணை தாமதமாகவே தமக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.இந்த ஆணை நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் தனது கைகளில் கோப்பாய் பொலிஸாரால் கையளிக்கப்பட்டதாகவும் ஒதுக்கப்பட்ட கால அவகாசம் முடிவுற்றமையினால் விசாரணைக்கு செல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
விசாரணைக்கு சமூகமளிப்பதற்கான மாற்று திகதி தொடர்பாக தகவல் தருமாறு கோப்பாய் பொலிஸாரிடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
எனினும் குறித்த செய்தி தொடர்பான விபரங்களை கோரிய போது நேரில் சமூகமளிக்கையினில் அது பற்றி தகவல் வழங்குவதாக குற்றப்புலனாய்வு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
ஏற்கனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர் சிறீதரன் மற்றும் முன்னாள் தமிழ் நாடாளுமன்ற அங்கத்தவர்களென தொடர் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment