Latest News

April 18, 2013

ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் பூனேவில் திருமணம் நடந்தது
by admin - 0

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட முக்கிய திரையுலகங்களில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை நயன்தாரா பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாதவர். பிரபுதேவாவை பிரிந்து மறுபடியும் நடிக்க வந்த நயன்தாரா, மற்ற திரைநட்சத்திரங்களை விட்டு தள்ளியே இருந்தாலும் ஆர்யாவோடு மட்டும் நல்ல விதமாக பழகியதால், ஆர்யா- நயன்தாரா இடையேயான உறவு பற்றி பலவிதமாக பேசப்பட்டுவந்தது.இந்நிலையில் ஆர்யாவுக்கும் - நயன்தாராவுக்கும் திருமணம் நடந்துவிட்டது என ஒரு செய்தி சில நாட்களாக திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்து வந்தது. இதுகுறித்து விசாரித்தபோது ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் பூனேவில் திருமணம் நடந்தது உண்மை என்றார்கள்.
விவசாயி இணையத்தை like(விருப்பம் ) செய்து விட்டு வெளியேறுங்கள் ...

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஆர்யாவும் நயன்தாராவும் நடித்துவரும் ’ராஜா ராணி’ திரைப்படத்தின் ஒரு முக்கியக் காட்சிக்காக இருவருக்கும் திருமணமாவது போன்ற காட்சி 3 நாட்களாக பூனேவிலுள்ள ஒரு முக்கியமான சர்ச்சில் படமாக்கப்பட்டதாம்.

இதை தூரத்திலிருந்து பார்த்த ஏதோ ஒரு ஆசாமி உண்மையான திருமணம் நடந்ததாக செய்தியை பரப்பிவிட்டதாக சிரிக்கின்றனர் ராஜா ராணி படக்குழுவினர்.
more photo click here
« PREV
NEXT »

No comments