Latest News

April 10, 2013

லோஹினி ரதிமோகனை இலங்கைக்கு அனுப்பக் கூடாது'
by admin - 0

ஐக்கிய நாடுகள் சபையின் அகதி அந்தஸ்து பெற்றிருக்கின்ற நிலையிலும், ஐக்கிய அரபு இராட்சியத்தில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் செய்தியாளரான லோஹினி ரதிமோகன் அவர்கள் குறித்து எல்லைகளற்ற செய்தியாளர்களுக்கான அமைப்பான ஆர் எஸ் எஃப் கவலை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 11 ஆம் திகதி ஐக்கிய அரபு இராட்சியத்தால், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ள 19 பேரில் இவரும் அடங்குகிறார்.
இலங்கையில் அண்மைய நிகழ்வுகள் மற்றும் அங்கு தமிழ் செய்தி ஊடகங்கள் எதிர்நோக்கும் மோசமான சூழ்நிலை ஆகியவற்றுக்கு மத்தியில் லோஹினி ரதிமோகனை அங்கு திருப்ப அனுப்பக் கூடாது என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
இலங்கையில் ஜனநாயகத்துக்கான செய்தியாளர் அமைப்பும் ஆர் எஸ் எஃப் உடன் சேர்ந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை தடுப்பதற்கு ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அவை கோரியுள்ளன.
« PREV
NEXT »

No comments