இந்திய மீனவர்கள் அத்து மீறி வடகடலில் கடற்றொழில் நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த சிறைச்சாலை சிங்கள அதிகாரி இந்தியாவில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் பற்றி இந்திய மீனவர்களிடம் கேட்டுள்ளார்.
இதற்கு இந்திய மீனவர்கள் அவரது கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. இதனால் தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக நம்பகமாக தெரியவருகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு இலக்கான இந்திய மீனவர்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.

No comments
Post a Comment