Latest News

April 09, 2013

கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் மாவை என்ற செய்தியை சுரேஸ் மறுத்துள்ளார்.
by admin - 0

வட மாகாண சபைத் தேர்தலில் தமழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் மாவை. சேனாதினாராஜா என வெளியாகியுள்ள செய்தி ஊகத்தின் அடிப்படையில் அரசியல் நோக்கங்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது எனவும் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக எந்தவெரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை எனவும் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பு இத்தேர்தலில் பொட்டியிடுவதை நிராகரிப்பதா? அல்லது முதலைமைச்சர் யார் என்பதை தீர்மாணிக்கவில்லை.

முதலைமைச்சர் வேட்பாளர் மாவை தான் என சிங்கள ஊடகங்களிலும் யாழ் ஒரு தமிழ் பத்திரிகையிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்திகள் எமக்கு எதிரான கட்சிகள் அரசியில் ஆதாயம் தேடுவதற்காகவும் ஊகத்தின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டவையாகும்.

முதன்மை வேட்பாளர் தான் என்பதை மாவை தானே மறுத்துள்ளார்.

வடமாகாண தேர்தல் தொடர்பாக அரசாங்கம் அறிவித்த பின்னர் நாம் அது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments