Latest News

April 14, 2013

பாடகர் பி பீ ஸ்ரீனிவாஸ் காலமானார்
by admin - 0

பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் அவர்கள் சென்னையில் காலமானார்.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் அவர் மிகவும் இனிமையான பாடல்களை பாடியிருக்கின்றார்.அதேவேளை, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகவும் அவர் திகழ்ந்தார்.
தமிழ் திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவையாக இன்றும் திகழ்கின்றன.
ஆந்திராவில் காக்கிநாடாவில் இவர் பிறந்தார். அவரது இயற்பெயர் பிரதிவாதி பயங்கரா ஸ்ரீனிவாஸ் ஆகும்.
1952 ஆம் ஆண்டு மிஸ்டர் சம்பத் என்ற ஹிந்திப் படத்தின் மூலம் தனது திரையிசைப் பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீனிவாஸ் அவர்கள், 1955 இல் மலையாளத்தில் ஹரிச்சந்திரா என்ற படத்திலும் அடுத்து பாடினார்.
பிரேமபாசம் என்ற படத்தில் அவர் பாடிய தனிப்பாடல்தான் அவரது முதலாவது பிரபலமான பாடலாகக் கூறப்படுகின்றது.
தமிழில் ஜெமினிகணேசனுக்கு அதிகமான பாடல்களைப் பாடிய அவர் முத்துராமன், ரவிச்சந்திரன், ஏவிஎம் ராஜன் போன்ற நடிகர்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார்.
கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படும் ராஜ்குமாருக்கும் அதிகமான பாடல்களை இவரே பாடியிருக்கிறார்.
பல பக்தி பாடல்களும் இவரது பங்களிப்பில் அடங்குகின்றன. பல இசை குறித்த அமைப்புக்களுக்கும் அவர் தலைமை தாங்கியிருக்கிறார்.
தமிழ் புதுவருடமான ஏப்ரல் 14 ஆம் திகதி காலமான அவருக்கு இறக்கும் போது வயது 82.

காலஞ்சென்ற பிரபல பின்னணிப் பாடகர் பி பீ ஸ்ரீநிவாஸ் ஒரு பல்துறை வித்தகர் என்கிறார் திரைப்பட விமர்சகர் தியோடர் பாஸ்கரன்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, "காலத்தால் அழியாத காதல் மற்றும் தத்துவப் பாடல்களை" அவர் பாடினார் எனக் கூறும் பாஸ்கரன், பல சிறப்புகள் இருந்தும் அவர் உரிய முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பதையும் சுட்டுக்காட்டுகிறார்.
மறைந்த PBS குறித்து தியோடர் பாஸ்கரன்

மாற்று மீடியா வடிவில் இயக்க
தமிழ் திரையுலகுக்கு மென்மையாக, நளினமாகப் பாடக் கூடிய ஒரு பாணியை புகுத்தியவர் PBS என்றும், பல மொழிகளில் அவருக்கு புலமை இருந்ததால், பாடல்களின் அர்த்தத்தை நன்கு புரிந்து கொண்டு அதைப் பாடினார் என்றும் தியோடர் பாஸ்கரன் கூறுகிறார்.
நிலவில் மனிதன் முதலில் காலடி வைத்ததை மையமாகக் கொண்டு from man to moom and moon to god எனும் ஒரு இசைத்தட்டையும் ஆங்கிலத்தில் அவர் வெளியிட்டார்.
அவரது மறைவுக்கு பல்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments