Latest News

April 04, 2013

இரண்டே நாட்களில் இரண்டு லட்சம் ரசிகர்களைக் கவர்ந்த மரியான் டிரைலர்
by admin - 0

கொலவெறி” பாடலின் வெற்றிக்கு பின்னர் தனுஷுக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழ் அறியாத மக்கள் கொலவெறியின் கலக்கல் வெற்றிக்குப் பின்னர் தனுஷின் படங்களையும், பாடல்களையும் விரும்பி பார்க்கவும் கேட்க ஆரம்பித்து விட்டனர் என்றே சொல்லலாம்.

அதே போல் விரைவில் வெளியாக இருக்கும் அவரது 'மரியான்' படத்தின் ட்ரெய்லர் காட்சிகள், யூ டியூபின் மூலம் வெளியான இரண்டே நாட்களில் 2 லட்சம் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இதில், மீனவராக வரும் தனுஷ் 50 அடி உயரத்தில் இருந்து டைவ் அடிக்கும் காட்சிகளுக்காக சர்வதேச அளவில் உள்ள மூழ்காளர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டதாக தெரிகிறது.

« PREV
NEXT »

No comments