.jpg)
நாகபாம்பு பெண் நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் அவருக்கு எதிரான பிடியாணை உத்தரவை கொழும்பு கோட்டை நீதிமன்றம் கடந்த 04 ஆம் திகதி பிறப்பித்தது.
சந்தேக நபரான நிரோசா விமலரட்ன அல்லது டிலானி என அழைக்கப்படும் இந்தப் பெண் கடந்த 04 ஆம் திகதி வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் அவர் இருக்கின்ற இடத்தையோ இன்றேல் அவருடைய நிரந்தர முகவரியையோ தம்மால் தேடியறிந்துக்கொள்ளமுடியவில்லை என்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு இன்று திங்கட்கிழமை கொண்டுவந்த கொள்ளுப்பிட்டி பொலிஸார் அவர் நாட்டைவிட்டு தப்பிச்சென்றுவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யவேண்டுமாயின் பிடியாணையின் பிரதியை விமானநிலைய பொலிஸாரிடம் கையளிக்குமாறு நீதவான் கேட்டுக்கொண்டார்.
சந்தேக நபர் இரவு விடுதி ஒன்றில்; நாகபாம்பு ஒன்றை வைத்திருந்தமை தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் கடந்த 04 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அந்த வழக்கு விசாரணை செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments
Post a Comment