Latest News

April 11, 2013

இராணுவ விசாரணை அறிக்கைகளை இதனால் பகிரங்கப்படுத்த முடியாது அமெரிக்கத் தூதுவரின் கோரிக்கை நிராகரிப்பு
by admin - 0

இலங்கையில் இடம்பெற்ற
போர்க் குற்றச் செயல்
தொடர்பில் இராணுவத்தினர்
நடத்திய விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு
தூதுவர் மிச்சல் சிசேன் விடுத்த
கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 1957ம் ஆண்டு இராணுவ சட்டத்தின்
அடிப்படையில்
எந்தவொரு விசாரணை அறிக்கையையும்
பகிரங்கப்படுத்துவது சட்ட ரீதியில்
குற்றமாகும். இவ்வாறு அறிக்கைகளை வெளியிடத்
தொடங்கினால் ஆயிரக் கணக்கான
விசாரணைகளை அறிக்கையை வெளியிட
நேரிடும் என உயர் இராணுவ
அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இது இராணுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில்
சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடுமென
தெரிவித்துள்ளார். இதனால் இராணுவ
விசாரணை அறிக்கைகளை இதனால்
பகிரங்கப்படுத்த முடியாது என அவர்
குறிப்பிட்டுள்ளார்.

« PREV
NEXT »

No comments