Latest News

April 15, 2013

நாகராஜசோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ (அமைதிப்படை 2) படத்திற்கு எதிராக போராட்டம் நடத்த ஆலோசிக்கும் தி.மு.க
by admin - 0

அறுபது வயதை கடந்த ஸ்டாலின், தி.மு.க., இளைஞர் அணிச் செயலர் பதவியை வகிக்கிறார் என்பதை, மறைமுகமாக சுட்டிக்காட்டும் நையாண்டிவசனம்,மணிவண்ணன் இயக்கிய நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., (அமைதிப்படை 2) என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தின் ஒரு காட்சியில், மகளிர் அணி தலைவர்பதவியை நாகராஜசோழன் [சத்யராஜ்] ஏற்கிறார்.அதற்கு ஆம்பளையான நீங்கள் எப்படி, மகளிர் அணி தலைவராக பதவி ஏற்கலாம் என்ற கேள்வியை கேட்கும் மணிவண்ணனிடம், அவர் தனக்கே உரிய லொள்ளு நடிப்பில், 60 வயது கிழவனெல்லாம்.. இளைஞரணி தலைவராக இருக்கும்போது நான் மகளிர் அணி தலைவராக இருக்கக் கூடாதா? என எதிர்கேள்வி கேட்பது போன்ற காட்சி, அப்படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ளது.

அதுமட்டுமில்லையாம் காரணம் நீங்க நிறைய பண்ணீட்டிங்க குடும்பத்துக்கு ஆனா மக்கள் பட்னி தானே இருக்காங்க என மணிவண்ணன் கேட்க ஆல் இந்தியா ரேஞ்சில பாருங்கடா ஏதோ எங்க குடும்பம் மட்டுமே… கொள்ளை அடிக்கற மாதிரி என சத்தியராஜ் பேசுவது போல் உள்ள டயலாக் போன்றவையும் தி.மு.க .வை குறி வைத்தே எழுதப்பட்ட போன்று தி.மு.க வட்டாரத்தில் பேசுவதாகவும் செய்தி.

டிரெய்லர்யே இவ்வளவு இருக்கே படத்தில் என்னவெல்லாம் இருக்குதோ என முனுமுனுப்பு வேறு கேட்கின்றதாம்…

சர்ச்சைக்குரிய இந்த வசனத்தை நீக்க வேண்டும் என, வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசிக்க, இம்மாதம், 27ம் தேதி, திருச்சியில், தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் அவசரமாக கூடுகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments