Latest News

March 26, 2013

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கம்
by admin - 0

இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின்
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில்
இருந்து இலங்கை வீரர்களை நீக்க அணியின்
உரிமையாளர் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுக
ிறது. டைம்ஸ் ஒப் இந்தியா இந்த
செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில்
இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்களைத்
தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட
ுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை சுப்பர் கிங்ஸில் நுவான் குலசேகர மற்றும்
அகில தனஞ்செய ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களை அணியில்
இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக
தெரிவிக்கப்படுகிறது. போட்டிகளில் இருந்து இலங்கை வீரர்களை நீக்க
முடியாது என்று ஐ.பி.எல் அணிகளின்
உரிமையாளர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர். எனினும் தற்போது சென்னை சுப்பர் கிங்ஸ்
மேற்கொண்டுள்ள இந்த
தீர்மானத்தை தொடர்ந்து ஏனைய ஐ.பி.எல்
அணிகளும் இலங்கை வீரர்களை நீக்கலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments