Latest News

March 29, 2013

கிளிநொச்சியில் புனர்வாழ்வு பெற்ற இரு யுவதிகளை காணவில்லை
by admin - 0

கிளிநொச்சியில் புனர்வாழ்வு பெற்ற இரு யுவதிகள் கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் காணாமல் போயுள்ளதாக பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் ஒருவர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி என்றும் மற்றயவர் செஞ்சோலையில் இருந்து கல்வி கற்றவர் என்றும் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த இ.ரோஹினி (வயது 23) கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த கே.வினோதினி ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போனவர்களாவர்.

இது தொடர்பில் காணாமல் போன இ.ரோஹினியின் தாயார் தெரிவிக்கையில், ‘தனது மகள் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆனைவிழுந்தான் பகுதியில் வசித்து வந்ததாகவும் தொழில் நிமித்தம் கிளிநொச்சியில் உள்ள தனது நண்பியுடன் இணைந்து தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றில் குழாய் பொருத்தும் பயி;ற்சியில் ஈடுபட்டுவந்தபோது கடந்த 2011 ஜூன் மாதம் தொடக்கம் இருவரும் காணாமல் போனதாகவும்’ குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அக்கராயன் பொலிஸ் நிலையத்திலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படாத நிலையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் ரோஹினியின் தாயார் மேலும் குறிப்பிட்டார்.

« PREV
NEXT »

No comments