Latest News

March 18, 2013

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக்கோரி மதுரையில் ஒருவர் தீக்குளித்து மரணம்
by admin - 0

மதுரையில் கோரிப்பாளையம் தேவர் சிலை எதிரில் காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் இன்று மாலை 7.30 மணி அளவில் ஒரு இளைஞர், முகத்தை கருப்புத்துணியால் கட்டிக்கொண்டு, ஈழ கோஷத்துடன் மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார்.

ஈழத்திற்கு ஆதரவாகவும், சிங்களத்திற்கு எதிராகவும் அவர் கோஷம் எழுப்பியுள்ளார். தீவைத்துக்கொண்ட அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர்கள் மருத்துவமனை வாசலில் குவிந்து வருகின்றனர்.

தீக்குளித்து பலியான இளைஞர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.மனதில் தீ வையுங்கள் உங்கள் உடம்பில் தீ வைக்காதீர்கள் எம் உறவுகளே

« PREV
NEXT »

No comments