Latest News

March 25, 2013

யாழில் ஊடகவியலாளர் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து மரணம்
by admin - 0

யாழ்ப்பாணத்தில் இணையத்தள
ஊடகவியலாளர் ஒருவர்
கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக
தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் பன்னாலையைச் சேர்ந்த எஸ்.மயூரன்
(வயது 31)
என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர். இவர் சுகயீனமுற்ற நிலையில்
வீட்டிலிருந்துள்ளார். இந்நிலையில்,
இன்று அதிகாலை கிணற்றுக்கு சென்ற
வேளை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இவரது சடலம்
யாழ்.போதனா வைத்தியசாலையில்
சவச்சாலையில் வைக்கப்பட்டு சடலப்
பரிசோதனையின் பின்னர்
அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

« PREV
NEXT »

No comments