ஒருங்கிணைப்பாளர்கள்
-சீ.தினேஷ் மற்றும் கோ.திவ்யா ஆகியோரின்
கூட்டறிக்கை:- இன்று (20/03/2013) தமிழகம் முழுவதும் "தமிழீழ
விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு"-னால்
முன்னெடுக்கப்பட்ட "ஒரு கோடி மாணவர்கள்
தொடர் முழக்கப்போராட்டம்"
சென்னை மெரினா காந்தி சிலை தொடங்கி தமிழகத்தின்
அனைத்து மாவட்டங்களிலும் பேரெழுச்சியோடு நடைபெற்றது. இதில் தமிழக அனைத்துக் கல்லூரி மாணவர்கள்
உட்பட பொதுமக்கள்,வணிகர்கள் ,வழக்கறிஞர்கள்
உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும்
பேராதரவு தந்தது, மாணவர் கூட்டமைப்புக்கு பெரும்
உத்வேகத்தை தந்துள்ளது.மேலும் அனைத்து அரசியல்
இயக்க தலைவர்களும் ,தமிழ்தேசிய அமைப்புகளும்,முற்போக்கு இயக்கங்களும் மற்றும்
திரைத்துறையினரும் எங்கள் போராட்டத்திற்கு
தங்கள் ஆதரவினை தந்துள்ளனர்.அவர்களுக்கும்
எங்களது நன்றியினை கூட்டமைப்பு சார்பாக
தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அடுத்தக்கட்ட
போராட்டங்களை தமிழகத்திலுள்ள
அனைத்துக்கல்லூரி மாணவ பிரதிநிதிகளையும்
கலந்தாலோசித்து விரைவில்
இக்கூட்டமைப்பு அறிவிக்க இருக்கிறது.இப்ப
ோராட்டம் வெற்றிபெற உதவிய தங்கள் ஊடகத்திற்கு/ பத்திரிகைக்கு அனைத்துக்கல்லூரி மாணவர்களின்
சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி. இப்படிக்கு,
ஒருங்கிணைப்பாளர்கள், சீ.தினேஷ்
(9791162911)
No comments
Post a Comment