Latest News

March 25, 2013

நடிகர்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்,
by admin - 1

நடிகர்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்,
ஐயா சாமி நீங்க யாரும் எமக்காக எம்முடன்
சேர்ந்து போராடவோ புரட்சிசெய்யவோ வேண்டாம்,
நீங்கள் உங்கள் நலனை மட்டும்
பார்த்து ஒதுங்கியே இருங்கள், அது உங்கள்
தனி மனித சுதந்திரம், உங்களை போராடச்சொல்லி கட்டாயப்படுத்த
யாருக்கும் உரிமை இல்லை, உங்கள் படங்களில் என்ன
கருமத்தயாவது நடித்துவிட்டு போங்கள்,
எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நீங்கள் எமக்காக
போராடாததால் உங்கள் படம் ஒன்றும் ஓடாமல்
முடங்கிப்போகாது, படம் நன்றாயிருந்தால் பழகிப்போன பொழுதுபோக்காய் நாம்கூட
பார்க்கத்தான் போகிறோம், தொடர்ந்தும்
உங்களை கோடீஸ்வரராய் வாழவைப்போம், ஆனால்
ஒன்றுமட்டும் சொல்கிறேன் இனிமேல் உங்கள்
படங்களில் ஏழைக்கிழவியையும் ஏதுமற்ற
சிறுவர்களையும் அணைத்து காக்க வந்த கடவுள் ஆவது, உடல் பொருள் ஆவியை தமிழுக்கும்
தமிழர்க்கும்
கொடுப்பது முறையென்று கூச்சலிடுவது,
நாலுபேரை சுத்தி நிற்கவைத்து சுண்டங்காய்
பயல்கலான உங்களைப்போய் தமிழர்க்கு சுபீட்சம்
தரவந்த வீர தீர சூரர்களாய் நாக்கூசாமல் பாராடுவது, 26 மணி நேரமும் [நேரம் போதாமல் அடுத்த நாளில் 2
மணித்தியாலம் கடன் வாங்கி] மக்கள் மக்கள் மக்கள்
என்று மக்களுக்காக வியர்வையும் ரத்தமும்
சிந்துவது, பச்சைத்தமிழன் சிவப்புத்தமிழன்
என்று நீட்டி முழக்கி வசனம் பேசுவது, என்றெல்லாம்
இனிமேல் எவனாவது இந்த மாதிரி மாதிரி தமிழருக்காக ம........ புடுங்குற
மகாஉத்தமன் வேடம்போட்டால் திரை கிழியும்
சொல்லிவிட்டேன். பாலாபிஷேகமும் பூமாலை தீப
ஆராதனை மட்டும் கண்ட உங்கள் வானுயர்ந்த
வண்ணப்படங்களுக்கு செருப்பே மாலையாகும்,
சேற்று எருமைச்சாணியும் சிலவேளை உதவக்கூடும், பார்த்து பக்குவமாய்
நடந்து கொள்ளுங்கள், இந்த மாணவர் போராட்டம்
தமிழனின் உரிமைக்குரலாய் மட்டுமல்ல
இவ்வளவு காலமும் தமிழனை எழவிடாமல்
கட்டிவைத்திருந்த பல
மாயை விலங்குகளை தகர்த்தெறியத்தொ டங்கியிருக்கிறது, இன்னும் உடைத்தெறியும் பல
இழிவுகளை......

« PREV
NEXT »

1 comment

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

ஆன்மநேய அன்புடையீர் வந்தனம் உங்கள் தெளிவான சிந்தனைகள் மிகவும் சிந்திக்க தக்கவை .மக்களை மயக்கத்தில் வைக்கும் சினிமா கலைஞர்கள்,இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது.அவர்கள் வேஷம் களையப்படும் காலம் நெருங்கி விட்டது.அவர்கள்தான் உலகின் முக்கிய பிம்மங்கள் என்னும் போதையை இன்னும் மக்கள் மனதில் பிரதிபலிக்க முடியாது.மக்கள் தெளிவுடன் இருக்கிறார்கள் .நன்றி வாழ்த்துக்கள் ...ஆண்மநேயன் கதிர்வேலு.