Latest News

March 15, 2013

தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்கள் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு ஜயா நெடுமாறன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து
by admin - 0

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜயா நெடுமாறன் அவர்களுக்கு 80வது பிறந்தநாள் வந்திருந்தது. இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வாழ்த்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

இது இவ்வாறு இருக்க  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்கள் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு ஜயா நெடுமாறன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் நாம் ஆராய்ந்த போது ஜயா நெடுமாறன் அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நல்லிரவு தலைவர் அவர்களோ அல்லது தலைவர் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்ததாக தெரிய வருகிறது.இந்த நபர் தலைவர் அவர்களின் மனைவியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதன் பின் ஜயா நெடுமாறன் அவர்கள் தம்பி விரையில் வெளியில் வருவார் என்று உறுதிபட தன் தொடர்பில் உள்ளவர்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துவருகிறார்.

எது எவ்வாறிருப்பினும் இலங்கை அரசு தலைவர் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக என்று சொல்லி சோடிக்கப்பட்ட பல படங்களை வெளியிட்டிருந்தபோதும் தமிழ் உணர்வாளர்களாலும் முக்கிய புலி உறுப்பினர்களாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதோடு ஜயா நெடுமாறன் அவர்கள்  உறுதிபட அன்று தொட்டு இன்றுவரை தலைவர் அவர்களின் இருப்பை சத்தியம் செய்து உறுதிப்படுத்துவதோடு இல்லாத ஒன்றை இருக்கு என்று சொல்லி எனது பல ஆண்டுகால அரசியலை போலியாக்க முனைய மாட்டேன் என்றும் நெடுமாறன் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தகக்து. 
« PREV
NEXT »

No comments