ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் 3 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 10 பேர் உயிரிழந்தனர்.
ஐதராபாத்தின் தில்சுக் நகர் பகுதியில் பரபரப்பாக செயல்பட்டு வரும் வர்த்தக பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. கோனார்க்,வெங்கடாத்திரி தியேட்டர்கள், ஆன்ந்த் டிபன் செண்டர்உட்பட 3 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 10 பேர் பலியாகியுள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்துள்ளனர்.
குண்டுவெடிப்பிற்கான காரணம் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினரும், போலீ சாரும் விரைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத் நகர் முழுவதும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களில் அனைத்து செல்போன் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஐதராபாத் குண்டுவெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments
Post a Comment