Latest News

February 05, 2013

விஸ்வரூபம் இரண்டாம் பாகம் விரைவில்... தலைப்பு 'மூ'!
by admin - 0


பல்வேறு சிக்கல்களைக் கடந்து வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பட்ஜெட் ரூ 100 கோடி என கமல் கூறிவருகிறார். ஆனால் உண்மை வேறு. விஸ்வரூபத்தின் அனைத்துப் பணிகளும் கடந்த மே மாதத்திலேயே முடிந்துவிட்டதாக கமல் முன்பு தெரிவித்திருந்தார். அதே மாதத்தில் நடந்த கேன்ஸ் பட விழாவுக்குக் கூட அனுப்பியதாகக் கூறினார்கள். ஆனால் அதன்பிறகு கிட்டத்தட்ட 6 மாதங்கள் கமல் செய்து கொண்டிருந்த வேலை, விஸ்வரூபத்தின் இரண்டாம் பகுதியை எடுத்ததுதான். இன்னும் இரண்டு வார பணிகள்தான் இந்த இரண்டாம் பாகத்துக்கு பாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக, இந்த 100 கோடி என்பது ஒரு படத்துக்கான பட்ஜெட் அல்ல!! இந்த நிலையில், தான் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருவதை கமலே ஒருபேட்டியில் ஒப்புக் கொண்டார். மேலும் அந்தப் படத்துக்கு மூ என்ற தலைப்பைப் பதிவு செய்யவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த இரண்டாம் பாகத்தில் கமல் மூன்று வேடங்களில் நடித்துள்ளாராம். அதைக் குறிப்பிடும் வகையில்தான் மூ என்று தலைப்பு வைக்கிறாராம். தீவிரவாதி முல்லா உமர் அமெரிக்காவிலிருந்து தப்புவதுபோல் ‘விஸ்வரூபம்' படத்தை கமல் முடித்துள்ளார். இரண்டாம் பகுதியில் முல்லா உமர் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிடுவது போன்றும் அதனை கமல் முறியடிப்பது போன்றும் திரைக்கதை உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆங்கிலத்திலும் ரிலீஸ் செய்யப் போகிறாராம்.



« PREV
NEXT »

No comments