வடமாகாணத்திலிருந்து இரண்டு மாணவர்கள், ஆசியமட்ட பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பற்றுவதற்காக இந்தோனேஷியாவுக்கு பயணமாகவுள்ளனர்.
2012ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ்மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி உயிரியல் பிரிவு மாணவி மிதுரிகா மிகுந்தன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் சிவசுப்பிரமணியம் பவித்திரன் ஆகியோரே ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்வதற்காக செல்லவுள்ளனர்.
இலங்கையிலிருந்து இவர்களுடன் மேலும் சில மாணவர்கள் போட்டியில் பங்கு பற்றுவதற்காக இந்தோனேஷியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மாணவர்கள் இந்த மாதம் கல்வி அமைச்சினால் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இரண்டு வார காலம் அங்கு அவர்கள் போட்டிகளில் பங்கு பற்றவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments
Post a Comment