Latest News

February 11, 2013

போப்பாண்டவர் திடீர் ராஜினாமா: 28ம் தேதியுடன் விலகுகிறார்
by admin - 0


புனித போப்பாண்டவரான பெனடிக்ட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 16ம் போப்பாண்டவராக பெனடிக்ட் கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி இந்தப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 85 வயதான போப் தனது உடல் நிலையைக் காரணம் காட்டி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் 28ம் தேதியுடன் அவர் பதவி விலகிவிடுவார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் பிரடிரிகோ லோம்பார்டி இன்று அறிவித்தார். சமீபகாலமாக அவரால் போப்பாண்டவருக்கான பணிகளை மேற்கொள்ள இயலாத அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் ரோம் நகரில் ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் அவர் கையில் வைத்திருந்த உரையைப் படிக்க முடியாமல் சிரமப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இந்த மாத இறுதியுடன் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பல நூறு கோடி கத்தோலிக்க கிருஸ்துவர்களின் தலைவரான போப்பாண்டவர் புனித பீட்டரின் வாரிசாகக் கருதப்படுபவர் ஆவார். ரோம் நகரில் உள்ள வாடிகன் நகரில் போப்பாண்டவரின் தலைமையகம் உள்ளது. பெனடிக்டுக்கு முன் ஜான் பால் 26 ஆண்டுகள் போப்பாண்டவராக இருந்தார். ஆனால், பெனடிக்ட் 8 ஆண்டுகளிலேயே பதவி விலகுவது குறிப்பிடத்தக்கது.


« PREV
NEXT »

No comments