Latest News

January 17, 2013

விஜய்யின் ‘தலைவா’ அரசியல் படமா?
by admin - 0

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய், அமலாபால் ஜோடியாக நடிக்கும் படத்திற்கு பெயர் வைப்பதில் பல பிரச்சனைகள் உருவானது அனைவரும் அறிந்ததே. இதற்கு முன் விஜய் நடித்த துப்பாக்கி படத்திற்கு இதே போன்ற தலைப்பு பிரச்சனை வந்ததால், படக்குழுவினரிடம் பெயர் வைப்பதில் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தினார் விஜய்.



விஜய்யின் அறிவுறுத்தலின்படி எவ்விதத்திலும் பிரச்சனையோ, தடங்களோ வராத ‘தலைவா’ என்ற பெயரை வைத்துள்ளார்களாம் இந்த படத்திற்கு. இப்படம் அரசியல் சம்மந்தப்பட்ட படமா? என்று கேட்டதற்கு படத்தின் ஹீரோவான விஜய் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். படத்தின் தயாரிப்பாளரான சந்திரபிரகாஷும் இது அரசியல் சம்மந்தப்பட்ட படம் இல்லை என்று கூறிவிட்டாராம்.

ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் ’மாஸ்’ மற்றும் கதைக்கு தொடர்புடையதாக இருக்கிறதென்று இப்பெயரை வைத்திருக்கிறார்களாம். தற்போது மும்பையில் இருக்கும் ‘தலைவா’ படக்குழுவினர் அங்கு 2 பாடல்காட்சிகள், 3 சண்டைக்காட்சிகளை படமாக்குகிறார்களாம். பிரம்மாண்ட செலவில் 500-க்கும் மேற்பட்ட ஆர்டிஸ்டுகளை வைத்து பாடல்காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பலவித எதிர்பார்ப்புகளுடன் உருவாகிக்கொண்டிருக்கும் ’தலைவா’ மே மாதம் ரிலீஸாகிவிடும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


« PREV
NEXT »

No comments