யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் கடமை புரிந்து வந்த பொலிஸார் திடீரென இன்று காலை முதல் அவ்விடத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக கலைப்பீட மாணவர்கள் கூடுவதனை அடுத்தே இந்த திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இது குறித்து தெரியவருவதாவது:
யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில், விஞ்ஞான பீட வாயில், மாணவர் விடுதிகளின் வாயில்களில் கடந்த நவம்பர் 28ம் திகதி முதல் யாழ்ப்பாண பொலிஸார் காவற்கூடுகளை அமைத்து காவல் கடமையில் ஈடுபட்டு வந்தனர்.
பொலிஸாரின் பிரசன்னம் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் அமைவதாகக் குறிப்பிடப்பட்டு கடும் விமர்சனங்களுக்குள்ளாகிய நிலையிலும், ஒரு மாத காலமாக நிலைகொண்டிருந்த பொலிஸார் இன்று காலை முதல் திடீரென விலக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் சுதந்திரமான முறையில் அச்சமின்றி கூட்டத்துக்கு வரவேண்டும் என்ற நோக்கிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது.
இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டு மாணவர்களின் விடுதலை ஒருபுறமிருக்க, பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பதன் மூலமே அவர்களது விடுதலையை விரைவுபடுத்த முடியும் என்று துணைவேந்தர் பீடாதிபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் கலைப்பீட மாணவர்களும், விரிவுரையாளர்களும் இன்று கூடி ஆராயவிருக்கின்றனர்.
அதேபோலவே விஞ்ஞான பீடத்தினருக்கான சந்திப்பு விஞ்ஞான பீடாதிபதியின் தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை காலை விஞ்ஞான பீடாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

No comments
Post a Comment