Latest News

December 10, 2012

விஸ்வரூபம்' வெளியீட்டிலும் புதுமை!
by admin - 0

விஸ்வரூபம்' படத்தின் இசை வெளியீட்டு விழா 7ம் தேதி நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

கமல் பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி அன்று மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அது தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது நாளை (டிசம்பர் 7) சென்னை ஒய்,எம்.சி.ஏ மைதானத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்த இருக்கிறார்கள்.

'விஸ்வரூபம்' படத்தினை தயாரித்து இருப்பது கமலின் 'ராஜ்கமல் இன்டர்நேஷனல்' நிறுவனம்.



'விஸ்வரூபம்' படத்தினை பி.வி.பி நிறுவனம் முதலில் வெளியிட தீர்மானித்து, பிறகு ஏனோ விலகிவிட்டது. பின்னர் ஜெமினி நிறுவனமும் பேசி, பிறகு விலகிவிட்டது. தற்போது 'விஸ்வரூபம்' படத்தினை ராஜ்கமல் நிறுவனமே வெளியிட தீர்மானித்து இருக்கிறது. ஜனவரி 11ம் தேதி படம் வெளியாகிறது.

திரைத்துறையில் புதுமைகளை முன்னெடுக்கும் கமல், 'விஸ்வரூபம்' படத்தின் AURO 3D தொழில்நுட்பத்தினை தொடர்ந்து படத்தினை சின்னத்திரையில் DTH-ல் வெளியிட தீர்மானித்து TATA SKYயிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

5ம் தேதி மாலை பிலிம் சேம்பரில் நடைபெற்ற கூட்டத்தில் இதனை உறுதி செய்தார் கமல். படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு DTHல் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

இதற்கு தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து இருக்கிறார்கள்.

DTHல் கமல் வெளியிட தீர்மானித்து முடிவு எடுத்தால், தியேட்டர்கள் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் படத்தினை புறக்கணிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல் எடுத்து இருக்கும் இந்த புதிய முடிவை பார்த்து SUN DTH, கார்த்தி நடிப்பில் வெளியாகும் 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தின் DTH PREMIEREக்கு இப்போதே பேச்சுவார்த்தை தொடங்கி விட்டது.

கமலின் இந்த புதுமுயற்சி என்னவாகும் என்பதற்கான விடை விரைவில் தெரிந்துவிடும்.

« PREV
NEXT »

No comments