Latest News

December 10, 2012

21.12.2012 எதிரொலி இலங்கையில் 18ஆம் திகதி சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை
by admin - 0

எதிர்வரும் 18ஆம் திகதி சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நாட்டின் 14 கரையோர பிரதேசங்களை தெரிவு செய்து இவ் ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.

சுனாமி அனர்த்தம் ஒன்று ஏற்படுமாயின் அதன் போது செயற்படும் விதம் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னதாகவும் சுனாமி ஒத்திகை நடவடிக்கைகள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



« PREV
NEXT »

No comments