முன்னணியால் எதிர்வரும் 04
ஆம் திகதி யாழ். நகரில்
நடாத்தப்படவுள்ள கண்டன
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு தனது முழு ஆதரவினையும்
வழங்கியுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்கும்
பத்திரிகையாளர் சந்திப்பு தமிழரசுக்
கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் துணைச்
செயலாளர் யாழில் சி.வி.கே. சிவாஞானம்
தலைமையில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது, பல்கலைக்கழகக்
மாணவர்கள் மீதான தாக்குதலை அனைவரும்
ஒருமித்த குரலில் கண்டனத்தை வெளிப்படுத்த
வேண்டும் என்றும் இதற்காக தமிழ்த் தேசிய
மக்கள் முன்னணியின் முன்னெடுத்திருக்கும்
போராட்டத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் இத்தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 03
திகதி நல்லூரில் நடத்த தீர்மானிக்கப்பட்ட
போராட்டத்தை நிறுத்துவதாகவும் அவர்
தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு கட்சிகள்
பொது அமைப்புக்கள் அப்பால் அனைவரும்
ஒன்று சேர்ந்து எமது எதிர்ப்பை வெளிக்காட்டவே
என்று அவர் கேட்டுக்கொண்டார். கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக
மாணவர்களை பொலிஸார்
விடுதலை செய்வதுடன் மாணவர்களின்
பாதூகப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்
என்றும் அந்த மாணவர்கள் வாகனத்தில்
வெளிமாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவ அறிப்படுவதாகவும் உடனடியாக பொலிஸார்
கைது செய்த மாணவர்களை விடுதலை செய்ய
வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
No comments
Post a Comment