தடை விதிக்கப்பட்டுள்ளதா மாமடு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார். மாமடு நீர்த்தேக்கம் உள்ளிட்ட வவுனியாவின் பல நீர்த் தேக்கங்கள் நிரம்பி வான்பாயு நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஏ9 வீதியில் தற்போது ஒரு அடிவரை வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா பாவற்குளத்தின் ஆறு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த
பிரதேசத்திற்கு அருகில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடம் இருக்குமாறு வவுனியா அரசாங்க அதிபர்
கேட்டுக் கொண்டுள்ளார். இதேவேளை வவுனியா பூவரசங்குளம் ஊடாக செட்டிக்குளம் செல்லும் வீதி மூடப்பட்டுள்ளது.
No comments
Post a Comment