Latest News

November 21, 2012

யாழ். வேலணைப் பகுதியில் நபரொருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு
by admin - 0

யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் நபரொருவர் காணாமல்போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேலணை வங்களாவடியைச் சேர்ந்த சதாசிவம் லோகேஸ்வரன் (வயது 35) என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் குறித்த நபரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், தனது மகனை வெளியில் வருமாறு கூப்பிட்டு, அழைத்துச் சென்றதாகவும் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்றும் சதாசிவம் லோகேஸ்வரனின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

« PREV
NEXT »

No comments