Latest News

November 18, 2012

இலங்கைக்கு ஆப்பு
by admin - 0

ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் சபைக்கு புதிதாக 18 புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அதெரிக்கா அதிகப்படியான வாக்குகளுடன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச்சபையில் இந்த இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அமெரிக்காவுக்கு 131 வாக்குகள் கிடைத்தது. அடுத்தப்படியாக ஜேர்மனி 127 வாக்குகளுடனும், அயர்லாந்து 124 வாக்குகளுடனும் தெரிவு செய்யப்பட்டன. ஆஜென்ரீனா, பிறேசில், ஐவரிகோஸ்ட், எஸ்தோனியா, எதியோப்பியா, காபோன், ஜப்பான், கசாகிஸ்தான், கென்யா, மொன்ரனிக்ரோ, பாகிஸ்தான், தென்கொரியா, சியராலியோன், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், வெனிசுவேலா ஆகிய நாடுகளும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குத் தெரிவாகியுள்ளன. இதில் சீனா, ரஸ்யா, கியூபா ஆகிய நாடுகள் தேல்வியடைந்தன். இதனால்,இலங்கைக்கு அடுத்தஆண்டு மார்ச் மாதம் பெரும் நெருக்கடி ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஐ.நா மனிதஉரிமைகள் சபையில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் தொடர்பில் அடுத்த ஆண்டு மார்ச் மாத கூட்டத்தொடரில் மீண்டும் விவாதிக்கப்படும் போது, சிறிலங்கா கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

« PREV
NEXT »

No comments