பரிதி அவர்களின் கொலையாளிகளுக்கு ஐம்பதுனாயிரம்
யூரோக்களை சிங்கள அரசு சன்மானமாக வழங்கியிருப்பதாக
திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பிரெஞ்சுக்
காவல்துறையினரால் Villeneuve-Saint-Georgesல் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலின்
அடிப்படையில் பாரிஸ் லாச்சப்பல் (பரிஸ் - 18) பகுதியில்
பிறிதொரு சந்தேக நபரை காவல்துறையினர்
கைது செய்துள்ளனர். 33 அகவையுடைய சிறீலங்கா குடியுரிமையுள்ள சந்தேக நபர்
காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்
கொலைக்கு 50000 யூரோ சன்மானமும், சிறீலங்காவில் தமக்கு சுகபோக வாழ்க்கையை ஏற்பாடு செய்து தருவதாக சிங்கள அரசு இவருக்கு உத்தரவாதம் அளித்ததாகவும்
தெரிய வருகின்றது. கேணல் பரிதி கொலை தொடர்பான விசாரணைகள் மிக முக்கியமான பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி ஆதாரம் Le Parisien
www.leparisien.fr/espace-premium/actu/deux-suspects-interpelles-apres-le-meurtre-du-leader-tamoul-13-11-2012-2315875.php
No comments
Post a Comment