Latest News

November 07, 2012

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஒபாமாவுக்கு 28, ரோம்னிக்கு 14
by admin - 0

அமெரிக்காவில் முதல்
வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே வாக்குகள் எண்ணப்பட்டன.
அதில் ஒபாமாவுக்கு 28 வாக்குகளும், ரோம்னிக்கு 14
வாக்குகளும் பதிவாகின. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் வாக்குபதிவு இரு கிராமங்களில் தொடங்கியது. முதல் வாக்குப் பதிவு வடக்கு நியூ ஹாம்ப்ஷையரில் உள்ள டிக்ஸ்பில்லே நாட்ச்
என்ற கிராமத்தில் நடந்தது. இதில் ஒபாமாவுக்கு 5 வாக்குகளும், ரோம்னிக்கு 5
வாக்குகளும் கிடைத்தன. மற்றொரு கிராமமான ஹார்ட்ஸ் லொகோஷனில், ஒபாமாவுக்கு 23 வாக்குகளும்,
ரோம்னிக்கு 9 வாக்குகளும், லிபர்ட்டி கட்சி வேட்பாளருக்கு ஒரு வாக்கும்
கிடைத்தன. கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்தே இந்த இரு கிராமங்களில் தான் முதல் வாக்குப்
பதிவு தொடங்குகிறது. வாக்குப் பதிவு முடிந்த சில நிமிடங்களில் வாக்குகள்
எண்ணப்பட்டுவிடும். கிட்டத்தட்ட ஜனாதிபதி தேர்தல் முடிவின்
முன்னோட்டமாகவே இது அமையும்.
« PREV
NEXT »

No comments