Latest News

November 06, 2012

நவம்பர் 13-ம் தேதிக்கு தள்ளிப் போனது துப்பாக்கி... காரணம்
by admin - 0

விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் ரிலீஸ்
தேதி நான்கு தினங்கள்
தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருவதாக
உள்ளது. விஜய் - காஜல் அகர்வால் நடிக்க, ஏ ஆர்
முருகதாஸ் இயக்கும் படம் துப்பாக்கி. அனைத்து வேலைகளும்
முடிந்து, சென்சாரில் யு சான்று பெற்று நவம்பர் 9-ம்
தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளதாக முதலில்
கூறப்பட்டது. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ்
பின்னணி இசை அமைப்பதில் மிகவும் தாமதம்
செய்துவிட்டதால், இந்தப் படத்தை 9-ம்
தேதி வெளியிட முடியவில்லையாம்.
இன்னொரு பக்கம், இயக்குநர்
முருகதாசுக்கும் நாயகன் விஜய்க்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதால் இந்த
நிலை என்கிறார்கள். எப்படியென்றாலும் வரும் 13-ம் தேதி,
தீபாவளி தினத்தன்று படத்தை வெளியிடுவது உறுதி என
அறிவித்துள்ளனர் தயாரிப்பாளரும் இயக்குநரும்.
« PREV
NEXT »

No comments