Latest News

September 21, 2012

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய பட இயக்குனர் மீது நடிகை வழக்கு
by admin - 0

நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட
இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தில்
தன்னை ஏமாற்றி நடிக்க வைத்ததாகக் கூறிய
நடிகை சின்டி லீ கார்சியா அப்படத்தின்
இயக்குனர் மீதும், கூகுள் மீதும்
வழக்கு தொடர்ந்துள்ளார். இஸ்லாம் மார்க்கத்தையும், நபிகள்
நாயகத்தையும்
இழிவுபடுத்தி கலிபோர்னியாவைச் சேர்ந்த
நகோலா பெசிலி எடுத்த இன்னசன்ஸ் ஆப்
முஸ்லிம்ஸ் படத்தில் நடித்த நடிகை சின்டி லீ
கார்சியா இயக்குனர் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில்,
ஒரு ஏஜென்சி மூலமாகத் தான் இந்த படத்தில்
நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால்
இது இஸ்லாத்தை,
முகம்மது நபியை இழிவுபடுத்தும் படம்
என்று எனக்குத் தெரியாது. இயக்குனர் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றிவிட்டார்.
பாலைவன வீரர்கள் என்ற தலைப்பில் தான்
என்னிடம் திரைக்கதையைக் கொடுத்தனர்.
2,000
ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றை அடிப்படையாகக்
கொண்டு எடுக்கப்படும் படம் என்றும், எகிப்து பற்றிய கதை தான், இதற்கும்
மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும்
தெரிவித்தனர். படத்தில் முகம்மது நபி குறித்தும், கடவுள்
குறித்தும் நான் பேசாத வசனங்களை எல்லாம்
சேர்த்துள்ளனர். மேலும் படத்தை எடுக்கையில்
முகம்மத் என்ற பெயரே வரவில்லை "மாஸ்டர்
ஜார்ஜ்" என்று தான் கூறினர் என்றும்,
இறுதியில் வெளியிடப்பட்டதில் முகம்மத் என்ற பெயரை சேர்த்துள்ளனர் என்றார். இதையடுத்து கார்சியா இயக்குனர்
நகோலா மீதும், கூகுள் மீதும் லாஸ் ஏஞசல்ஸ்
நீதமன்றத்தில் கடந்த
புதன்கிழமை வழக்கு தொடர்ந்தார். இதில்
கூகுள் குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்
யூ டியூப்பில் உள்ள படத்தின் பகுதிகளை நீக்குமாறு கூகுளுக்கு உத்தரவிட
முடியாது என்று தெரிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments