கடும் வரட்சி காரணமாக
மண்டைதீவு, வேலணை,
புங்குடுதீவு,
ஊர்காவற்றுறை மற்றும்
காரைநகர் உள்ளிட்ட தீவகப் பகுதிகளில்; குடிநீரைப்
பெற்றுக்கொள்வதற்கு பொது மக்கள்
தொடர்ச்சியாகவும்
பெருஞ்சிரமப்பட்டு வருகின்றனர். வரட்சியின் அகோரத்தால் குடிநீரைப்
பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்ள்
நடுவெய்யிலில் காய்ந்து கொண்டிருக்கும்
நிலையிலும்; உள்ளனர். குறிப்பாக பிரதேச
சபைகளினால் வழங்கப்படும் நீரைப்
பெற்றுக்கொள்வதற்கே இவர்கள் காத்திருக்கின்றனர் கடும் வரட்சியினால்
வேலணை பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில்
மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீர்
விநியோகமானது முன்னரை விட
தற்போது குறைக்கப்பட்டள்ளதாக
பொது மக்கள் தெரிவித்துள்ளதோடு வழங்கப்படும்
குடிநீரானது நாளாந்த
தேவைகளுக்கு போதாது என்றும்
கவலை தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் மழை பெய்யாது போனால் தாம்
அன்றாட தேவைகளுக்கு நீரைப்
பெற்றுகொள்வதும் கடினம் எனத்
தெரிவித்துள்ள இம்மக்கள்
தமக்கு இப்போது வழங்குகின்ற
குடிநீரை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Post a Comment