Latest News

September 17, 2012

தப்பித்தார் பொட்டம்மான்!-இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரி
by admin - 0


முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரான பொட்டம்மான் உயிருடன் தப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனை இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக இனவாத அரசியல்வாதி ஒருவர் தனது சகாக்களிடம் பதற்றத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போர் முள்ளிவாய்க்காலில் நிறைவடைந்தது.

போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் அரச படைகளால் கொல்லப்பட்டனர்.

எனினும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரின் நிலைமை தொடர்பில் தொடர்ச்சியாக மர்மம் நீடித்து வந்தது.

இலங்கை அரசும் சரி, அரச படைகளும் சரி பொட்டம்மானின் நிலைமை பற்றி இது வரை வாயே திறக்கவில்லை.

இறுதியாக 2009 மே 13 ஆம் திகதி சக விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலருடன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் தப்பித்துள்ளதாக குறித்த இனவாத அரசியல்வாதி தனது சகாக்களிடம் தெரிவித்துள்ளார்

« PREV
NEXT »

No comments