’’இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்தவிதமான பயிற்சியும் அளிக்கக்கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் இலங்கை படையினருக்கு இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு கூறியிருக்கிறார். தமிழக மக்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காத அமைச்சரின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இலங்கை அரசு எப்போதுமே இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும்
எதிராகவே செயல்பட்டு வருகிறது. 2009ம் ஆண்டு போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை சிங்களப் படைகள் கொன்று குவித்தன. இலங்கைக் கடற்படையால் இதுவரை 600-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மைக் காலமாக சீனாவுடன் சேர்ந்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ‘இலங்கை எங்களின் நட்பு நாடு. அதற்கு தொடர்ந்து ராணுவ பயிற்சி அளிப்போம்’ என்று பாதுகாப்பு அமைச்சர் கூறுவது, பூகோள அரசியல் சூழல் குறித்து அவருக்கு சரியான புரிதல் இல்லை என்பதையும், தமிழக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் உணர்வுகளை அவரும், மத்திய அரசும் மதிக்கவில்லை என்பதையுமே காட்டுகிறது.
No comments
Post a Comment