பிள்ளைப் பாசத்தால்தான் தனது காதலையும், நயனதாராவையும் துறந்துள்ளார் பிரபுதேவா. இதை அவரே அவரது வாயால் கூறியுள்ளார்.
பிரபுதேவா நடிகராகவும், டான்ஸராகவும் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்த காலத்தில் தன்னுடன் நடனமாடி வந்த ரமலத்தை காதலித்து பரபரப்புக்கு மத்தியில் மணந்தார். ஆனால் அந்தக் காதலையும், கல்யாணத்தையும் பிரபுதேவா குடும்பத்தினர் கடைசி வரை ஏற்கவில்லை.இதனால் பிரபுதேவா, ரமலத் வாழ்க்கை ரகசியமாக கழிந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் திடீரென ரமலத், பிரபுதேவா வாழ்க்கையில் பெரும் புயல் வீசியது. புயலாக வந்து நுழைந்தவர் நயனதாரா. அவர் மீது கொண்ட முரட்டுக் காதலால், ரமலத்தைப் பிரிந்தார் பிரபுதேவா. பெரும் சட்டப் போராட்டம், உணர்வுகளின் போராட்டத்திற்கு இடையே விவாகரத்து செய்தார் மனைவியை.
அதன் பிறகு எப்போது நயனதாரா, பிரபுதேவா கல்யாணம் என்று அத்தனை பேரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் இந்தக் காதலும் திடீரென பிளந்து கொண்டது. இது அனைவரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. நயனதாராவுக்காகத்தானே தனது மனைவி, சொத்து பத்து அத்தனையையும் விட்டு வந்தார் பிரபுதேவா, பிறகு எதற்கு நயனதாராவை அவர் பிரிந்தார் என்பதே அனைவருக்கும் ஏற்பட்ட குழப்பம்.
ஆனால் இந்தப் பிரிவினைக்கு பிரபுதேவாவின் பிள்ளைப் பாசம்தான் காரணம் என்று இப்போது தெரிய வந்துள்ளது. எனக்கு என் பிள்ளைகள்தான் முக்கியம். அவர்களின் எதிர்காலம்தான் முக்கியம். அவர்களுக்காக எதையும் இழப்பேன் என்று முதல் முறையாக நயனதாராவைப் பிரிந்து வந்ததற்கான காரணத்தை 'இன்டைரக்டாக' அறிவித்துள்ளார் பிரபுதேவா.
ஏற்கனவே இதே காரணத்தைத்தான் மீடியாக்கள் செய்திகளாக வெளியிட்டு வந்தன. ரமலத்தை விட்டுப் பிரிந்த பின்னர் தனது குழந்தைகளை மட்டும் தொடர்ந்து பிரபுதேவா பார்த்து வருவதாகவும், அதை நயனதாரா விரும்பவில்லை என்றும், குழந்தைகளை விட்டு நிரந்தரமாக பிரிந்து வருமாறு அவர் கட்டாயப்படுத்துவதாகவும், பிரபுதேவா மறுத்ததால் கோபித்துக் கொண்டு கேரளாவுக்குப் போய் விட்டதாகவும், அங்கு அவரைத் தேடி பிரபுதேவா போனபோது வீட்டுக்குள் அனுமதிக்காமல் தெருவிலேயே நிறுத்தி விட்டதாகவும் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
எப்படியோ ரமலத் தனது கணவரைப் பிரிந்தாலும் கூட அவரது பிள்ளைகளுக்கு அப்பா கிடைத்து விட்டார்.

No comments
Post a Comment