Latest News

July 10, 2012

இரசாயனம் கலந்த மரக்கறிகளால் ஆபத்து வுனியா பிரதி விவசாயப் பணிப்பாளர் எச்சரிக்கை
by admin - 0

தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனங்களின் உதவியுடன் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளால் மக்களுக்குப் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக வவுனியா மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, அடிக்கடி ஏற்படும் தலைச்சுற்று, அங்கவீனமான குழந்தைகள் பிறத்தல் ஆகியனவற்றுக்கு இத்தகைய மரக்கறிகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"விவசாயச் செய்கையின் போது பல்வேறு இரசாயனங்களை உள்ளடக்கிய மருந்து வகைகளைப் பயன்படுத்துவதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. "குறிப்பாகக் கிராமப்புற விவசாயிகள் அளவுக்கு அதிகமாக இரசாயன வகைகளைப் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது.

இதனால் இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளை உண்போர் பாதிப்படைகின்றனர்.
"இதனைத் தடுப்பதற்காக வவுனியாவில் வேப்பிலைச்சாறு, உள்ளிச்சாறு, புகையிலைச்சாறு, வேப்பெண்ணை ஆகியவற்றை உபயோகித்து காய்கறி மற்றும் பழவகைகளில் ஏற்படும் கிருமிகளின் தாக்கம் கட்டுப்படுத்தப்படுகின்றது.

"மேலும் மரக்கறி வகைகளை உற்பத்தி செய்யும்போது சேதனப் பசளைகளே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் நெல், கிழங்குவகை ஆகியனவற்றுக்கும் இந்த முறை பயன்படுத்தப்படுகின்றன'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments