
மரக்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு செல்வதற்கு கட்டாயமாக பிளாஸ்டிக் கூடைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை மீண்டும் கொண்டுரப்படவுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் இந்நடவடிக்கை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்தார்.
இத்திட்டத்தினை முதலில் கொழும்பை அண்டிய பகுதிகளில் அமூலுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிளாஸ்டிக் கூடைகள் பயன்படுத்துவது தொடர்பில் கடந்த காலங்களில் வர்த்தக நிலையங்கள் பலவற்றின் வியாபாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இத்திட்டத்தினை ஒரு பழக்கத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கடந்த காலங்களில் இத்திட்டத்தின் அறிமுகத்தின் ஊடாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தமது கண்டனங்களை வெளியிட்டு போராட்டங்களையும் நடாத்தினர்.
இதற்கு தம்புள்ளையில் நடைபெற்ற சம்பவமானது சிறந்த உதாரணமாக கூறிக்கொள்ள முடியும்
No comments
Post a Comment