பிரபு தேவா - நயன்தாரா காதல் முறிந்தது என்பது தான் திரைவட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி. ஆனால் இந்த பிரிவு இருவருக்குமே சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது என்பதை நாம் யூகிக்க முடிகிறது.
ஒருபக்கம் பிரபு தேவா கொண்டாடுகிறார் இன்னொரு பக்கம் நயன்தாரா கொண்டாடுகிறார். பிரிவில் அவ்வளவு சந்தோஷமா!
ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் நயன்தாரா நேற்று தோழிகள் சிலருடன் சேர்ந்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினார். ஏற்கனவே நயன்தாராவுக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. அவர் கிறிஸ்தவர் என்ற போது தீபாவளி, கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம்.
பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்த போது நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். தற்போது பிரபுதேவாவுடன் காதல் முறிவால் மீண்டும் நடிக்க வந்த நிலையில் நேற்று ஈஸ்டர் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்த அவர் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு நண்பர்களை வரவழைத்து, அப்பம், பாயா, சிக்கன் பிரியாணி, என ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் பிரபு தேவா தனக்கு நெருக்கமான திரையுலக நண்பர்களுடன் தன் பிறந்தநாளைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்த அந்த மிட்-நைட் பார்ட்டியில் விஜய், சூர்யா, விஷால், ஜெயம் ரவி, த்ரிஷா, குஷ்பூ என பலரும் கலந்து கொண்டனர்.
பிரபு தேவாவின் பிறந்தநாள் பார்ட்டி படங்கள் இணையதளங்களில் பரவி வர, பிரபு தேவா த்ரிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சி நயன்தாராவை எரிச்சலடைய செய்ததாம். அதன் விளைவாகத்தான் பிரபு தேவாவை எரிச்சல் படுத்த நயன்தாரா தன் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார் என்று பேசிக்கொள்கிறார்கள்.
மீண்டும் நடிக்க முடிவு செய்த நயன்தாராவை தெலுங்கு திரையுலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது. இப்போதே நயன் கையில் இரண்டு படங்கள் உள்ளன. தெலுங்கு ஹீரோ கோபிசந்துடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

No comments
Post a Comment