வினோத்குமாரை அல்போன்சாவும், அவரது தரப்பினரும் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று அல்போன்சாவின் காதலர் வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கப் போவதாகவும் அவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
நடிகை அல்போன்சாவின் காதலராக இருந்து வந்தவரான வினோத்குமார் நேற்று இரவு அவரது விருகம்பாக்கம் வீட்டில் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த வீட்டில்தான் அவர் அல்போன்சாவுடன் வசித்து வந்தார்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இது ஒரு கொடூரக் கொலை என்று வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வினோத்குமாரை அடித்துக் கொன்றுள்ளனர். அவரது காது, முகத்திலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. மேலும் உடல் முழுவதும் ரத்தக்காயங்கள் காணப்பட்டன. அவரை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து கொன்று தூக்கில் போட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்.
இதுதொடர்பாக அல்போன்சா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதியை நேரில் சந்தித்துப் புகார் கொடுக்கவுள்ளோம் என்றார்.
இந்தப் புகாரால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments
Post a Comment