Latest News

March 11, 2012

பிரான்சுக்கு அழைத்த மாப்பிள்ளைக்கு அல்வா கொடுத்த மணப்பெண் !
by admin - 0

நீங்கள் எல்லாம் திருநெல்வேலி அல்வா கேள்விப்பட்டிருப்பீங்க, இல்லாட்டிப் போனால் திருப்பதி லட்டுக் கூட கேள்விப்பட்டிருப்பீங்க.... இது யாழ் குருநகர் அல்வா ! ஓகே வாங்க மேட்டருக்குப் போகலாம் !

யாழ் குருநகரில் வசித்துவரும் யுவதி ஒருவரின் பெற்றோர், சாவகச்சேரியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தோடு சம்பந்தம் பேசியுள்ளனர். சாவகச்சேரியில் வசித்து வரும் குறிப்பிட்ட குடும்பத்தாரின் மகன் பிரான்சில் வசித்துவந்துள்ளார். மேற்படி சம்பந்தம் சுமூகமாகச் சென்றுள்ளது. இதனை அடுத்து பிரான்சில் இருந்த அந்த இளைஞர் பெண் வீட்டாருடன் கதைத்து, அவர்களுக்குத் தேவையான சில பல உதவிகளைச் செய்துள்ளார். இது லட்சக்கணக்கில் செய்யப்பட்டுள்ளது என்பது போக, இனி வரும் விடையங்கள் தான் அதிர்ச்சியானவை ஐயா !

இதனிடையே குறிந்த இளைஞன் மேலும் லட்சக் கணக்கில் செலவுசெய்து, தனது வருங்கால மனைவியை பிரான்சுக்கு அழைத்துள்ளார். கடந்த 2ம் திகதி இந்த யுவதி பிரான்சுக்குச் சென்றுள்ளார். அங்கே வருங்காலக் கணவனுடன் 1 நாள் தங்கிய நிலையில், மறு நாள் காலை தான் வெளியே செல்லவேண்டும் என அவர் கூறியுள்ளார். பிரான்ஸ் வந்து 1 நாளே ஆன நிலையில், நீ எவ்வாறு தனியாகச் செல்வாய் நானும் உன்னுடன் வருகிறேன் என்று வருங்காலக் கணவனும் கூடவே சென்றுள்ளார். இவர்கள் வெளியே சென்றவேளை திடீரென 3 இளைஞர்கள் வந்து இவர்களை மறிக்க, மணமகள் செல்லிவைத்தது போல ஓடிப்போய் ஒரு காரில் ஏறியுள்ளார்.

என்ன தான் நடக்கிறது என்று தெரியாமல் சுதாரித்துக் கொள்வதற்கு முன்னதாகவே, ஒரு இளைஞன் வருங்கால கணவனை அணுகி நான் தான் அப் பெண்ணில் காதலன் என்று தன்னை அறிமுகப்படுத்தி, பின்னர் தானும் அப்பெண்ணும் குருநகரில் சேர்ந்து எடுத்த போட்டோக்களையும் காட்டியுள்ளார். இதுமட்டுமல்லாது பிற ஆதாரங்களையும் காட்டி அப் பெண்ணின் நீண்ட நாள் காதலன் தான் தான் எனக் கூறியுள்ளார். பின்னர் மின்னல் வேகத்தில் அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட காரில் ஏறி மின்னலாக மறைந்து போனார்கள் !

அதிர்ச்சியில் உறைந்த வருங்காலக் கணவர், என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எல்லாரும் அல்வா கொடுப்பார்கள், ஆனால் இது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா ? காதலிக்கலாம்... கைவிடலாம்.... ஏமாற்றலாம்.... ஆனால் கல்யாணம் கட்ட இருந்தவர் பணத்திலேயே பிரான்ஸ் வந்து தனது கள்ளக் காதலனுடன் ஓடும் தைரியும் இப் பெண்ணுக்குமட்டும் தான் இருந்திருக்கிறது, நீண்ட நாள் காதலன் எனத் தன்னை அடையாளப்படுத்தியவர் பணத்தைச் செலவுசெய்து அப் பெண்ணைக் கூப்பிட்டிருக்கலாமே ? இதற்கு மேலும் என்ன சொல்வது ?
« PREV
NEXT »

No comments