Latest News

March 04, 2012

கோலிவுட்டின் 'கனவுக் கன்னி' ஹன்சிகா
by admin - 0


சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ்ச் சங்கம் ஒன்று கோலிவுட்டின் கனவுக் கன்னி என்ற பட்டத்தை நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

பார்க்க 'குண்டான பார்பி டால்' போல இருக்கும் ஹன்சிகா, நடிக்க வந்தபோதே பெரும் கவர்ச்சிப் பிரளயத்தை ஏற்படுத்தியவர். 'குட்டி குஷ்பு' என்றும் திரையுலககினர் இவரைக் கொண்டாடவே, கூடுதல் மவுசாகிப் போனது.

கடந்த ஆண்டு தனுஷுடன் மாப்பிள்ளை, இளைய தளபதி விஜயுடன் வேலாயுதம் மற்றும் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் என அடுத்தடுத்து மூன்று முக்கிய நடிகர்களுடன் ஜோடி போட்டார். டான்ஸ், நடிப்பு ஆகியவற்றில் பெரிய அளவில் இவர் இல்லை என்ற போதிலும், அடுத்த குஷ்பு என்று வர்ணிக்கப்படுவதால் அவருக்கு உச்சி குளிர்ந்து போயுள்ளது. முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்ததால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் வாலன்டியராக வாங்கி விட்டார்.

தற்போது தயாரிப்பாளராக இருந்து, ஹீரோவாக புரமோட் ஆகி விட்ட உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் நடித்துள்ளார். அது தான் அவருக்கு இந்த ஆண்டில் வெளிவரும் முதல் படம். அதையடுத்து சூர்யாவுடன் சேர்ந்து சிங்கம் 2, சிம்புவின் வேட்டை மன்னன் ஆகிய படங்கள் வெளிவருகின்றன. கருப்பு மின்னல் விஷாலை வைத்து சுந்தர் சி எடுக்கும் படத்திலும் ஹன்சிகா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு 3 படங்களில் நடித்து தமி்ழ் ரசிகர்களை குஷிபடுத்திய ஹன்சிகாவுக்கு 2011ம் ஆண்டின் கோலிவுட்டின் கனவுக் கன்னி என்ற பட்டத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் சங்கம் ஒன்று வழங்கியுள்ளது. இதனால் குஷியாகியுள்ள ஹன்சிகா இந்த ஆண்டும் அந்த பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள நினைக்கிறார்.

இந்த விருதை வாங்கி வருவதற்காக சிங்கப்பூரில் தற்போது முகாமிட்டுள்ள ஹன்சிகா இதுகுறித்துக் கூறுகையில், விழாவில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் வந்துள்ளேன். கோலிவுட்டின் கனவுக் கன்னி என்று என்னை அழைப்பது பெருமையாக இருக்கிறது என்றார்.
« PREV
NEXT »

No comments