பொத்தல - உலுவிட்டிகே பகுகுதியில் உள்ள அதிபரின் வீட்டிற்கு நேற்று (03) இரவு முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
குறித்த வீட்டின் மீது ஐந்து துப்பாக்கி ரவைகள் பதிந்துள்ளதாகவும் இதனால் வீட்டின் யன்னல், கதவு என்பவற்றிற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் தெய்வாதீனமாக வீட்டினுள் இருந்த எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
துப்பாக்கிச் சூடு நடத்த வந்தவர்கள் அதிபர் பொறுப்பேற்றுள்ள பாடசாலையில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து பதாகைகள் சிலவற்றை வீசிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாடசாலை அதிபர் சரஸ்வதி தஹனாயக்கவிடம் வினவியபோது, சம்பவத்தை அவர் உறுதிப்படுத்தினார்.
No comments
Post a Comment