Latest News

March 10, 2012

வீதியில் கூடி நின்று வம்பு பேசிக் கொண்டிருந்தவர் அடித்துக் கொலை
by admin - 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று பிற்பகல் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு புளியடி வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த மகேந்திரன் (44வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புளியடி வீதியில் ஒரு குழுவினர் உரையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட முறுகலையடுத்தே குறித்த நபர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் படுகாயமுடன் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மூவர் தொடர்புபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள அதேவேளை இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
« PREV
NEXT »

No comments