சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்விக்கு நெல்லை மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளை ரஜினி நற்பணி மன்ற நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு கடிதத்தை கொடுத்தனர்.
இந்த ஆதரவு கடிதத்தில் நெல்லை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் பானுசேகர், நிர்வாகிகள் குணசேகர பாண்டியன், சூர்யா கணேசன், சங்கரன்கோவில் குணா, வீரபுத்திரன், கண்ணதாசன், மேலநீலித நல்லூர் ஆப்பிள் தங்கமணி மாரிச்சாமி உள்பட முக்கிய நிர்வாகிகள் கையெழுத் திட்டுள்ளனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து ரஜினி மன்ற நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம் செய்வார்கள் என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment