குடிசன மதிப்பீடு தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்காக விசேட தொலைபேசி இலக்கங்களை குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பெப்ரவரி 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குடிசன மதிப்பீடு எதிர்வரும் 19ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த மதிப்பீட்டை அடுத்தே விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது நடைபெறும் குடிசன மதிப்பீடு தொடர்பில் தகவல் அறிய விரும்புபவர்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள 3 தொலைபேசி இலங்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியும்.
011 2 68 95 95, 011 2 68 83 83 மற்றும் 011 2 68 37 37 ஆகிய இலங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் தகவல்களினை பெற்றுக் கொள்ள முடியும்.
No comments
Post a Comment