அக்கப்பலின் கப்டன் எட்வார்ட் ஸ்மித் கப்பலிலிருந்த மதுச்சாலையில் மது அருந்தி விட்டு கப்பலை செலுத்தியதாக மேற்படி கப்பல் விபத்தில் உயிர் தப்பிய எமிலி நிச்சர்ட்ஸ் உரிமை கோரியுள்ளார்.
எட்வார்ட் ஸ்மித் (62 வயது) கப்பல் விபத்துக்கு சிறு மணித்தியாலங்களுக்கு முன்பு கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கான மாலை விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
டைட்டானிக் கப்பல் மூழ்கி இரு நாட்கள் கழித்து மீட்புக் கப்பலான ???? இருந்தவாறு தனது வீட்டினருக்கு எமிலி றிச்சர்ட்ஸ் எழுதிய கடிதத்திலேயே மேற்படி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கப்பல் விபத்தில் உயிரிழந்த 1522 பயணிகளில் எமிலி றிச்சர்ட்ஸ்ன் சகோதரரான ஜோர்ஸ் உள்ளடங்குகிறார்.
இந்நிலையில் எமிலி றிச்சர்ஸ் தனது மாமியாருக்கு எழுதிய மேற்படி கடிதத்தில் கப்டன் கப்பலைச் செலுத்தும் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டு மதுச்சாலையில் மது அருந்தினார். இது கப்டனின் தவறாகும்.
நாம் தற்போது அறிந்ததன் பிரகாரம் எனது அப்பாவி சகோதரன் கடலில் மூழ்கியுள்ளான். இது போன்ற சம்பவத்தை இனிமேலும் நாம் ஒரு போதும் காண மாட்டோம் என நம்புகிறோம். நானும் அம்மாவும் பிள்ளைகளும் இறுதிப் படகில் இருந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
எமிலி றிச்சர்ட்ஸ் (24 வயது) அமெரிக்க ஒஹியோ மாநிலத்திற்கு சென்ற தனது கணவர் ஜேம்ஸுடனும் மகன்மாருடனும் இணைந்து கொள்ளவே டைட்டானிக் கப்பலில் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்தக் கடிதமும் எமிலி றிச்சட்ஸால் அமெரிக்க நியூயோர் நகரை வந்தடைந்த பின் எழுதப்பட்ட கடிதமும் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளன. இக்கடிதங்கள் 20,000 ஸ்ரேலிங் பவுண் வரையான விலைக்கு விலைபோகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments
Post a Comment