மங்காத்தா படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தின் மவுசு மேலும் கூடியிருக்கிறது. இதனால் அவரை வைத்து படம் இயக்க டைரக்டர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்தியில் நடிகர் சைப் அலிகான் நடிப்பில் வெளியான த்ரில்லர் படமான ரேஸ் படத்தை, தமிழில் அஜித்தை வைத்து ரீ-மேக் செய்ய பிரபல மும்பை பட நிறுவனம் ஒன்று முயற்சித்து வருகிறது.
இப்போது இந்தபடத்தை யார் இயக்குவது என்பது போட்டி. தற்போது அஜித் பில்லா-2வில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.
இதுதவிர சமீபத்தில் வெங்கட் பிரபு மீண்டும் அஜித்துடன் கூட்டணி சேர இருப்பதாக தனது ட்விட்டரில் தெரிவித்து இருந்தார். இதனிடையே மும்பை பட நிறுவனம், பிரபுதேவாவை இயக்குனராக தேர்வு செய்ய விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அஜித்தை இயக்குவது யார் என்பதில் மூன்று இயக்குனர்களிடையே கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
No comments
Post a Comment