தெற்கு மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக், வொசிங்டனில் நேற்று ஏபி செய்தியாளருக்கு அளித்த செவ்வியிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். பல இன்னல்களை சந்தித்து இழப்புக்கள் மூலம் துன்பதில் இருக்கும் எம்மக்கள் இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த காலங்களில் இனமோதல்கள் இடம்பெற்ற நாடுகளில் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்கமல் விட்டதால் அங்கே மீண்டும் யுத்தம் எற்பட்டதே சரித்திரமாக இருக்கிறது அதே போன்று இலங்கையில் நடைபெறுமாயின் அங்கேயும் மீண்டும் போர் இடம்பெறும் இவ்வாறு றொபேட் ஓ பிளேக் கூறியுள்ளார்.போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா அரசாங்கம் பல வீதிகளையும் அடிப்படைக் கட்டுமான வசதிகளையும் வடக்கில் கட்டியெழுப்பியுள்ளது.
ஆனால் வடக்கில் உள்ள பல தமிழர்கள் தாம் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாகவே உணர்கிறார்கள்.
வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தி அதிகாரங்களை பகிர்ந்து, தமிழர்கள் தமது பகுதியில் மேலும் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வதற்கு வழிசெய்ய வேண்டும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments
Post a Comment